மகளின் திருமண ஏற்பாடு தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சப்-இன்ஸ்பெக்டர்

திடீரென கோவைக்கு செல்லுமாறு கூறிய அதிகாரிகளால் தன் மகளின் திருமண ஏற்பாடு தடைபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் வருத்தத்துடன் ஆடியோ வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Update: 2022-09-27 18:45 GMT

திருப்புவனம், 

திடீரென கோவைக்கு செல்லுமாறு கூறிய அதிகாரிகளால் தன் மகளின் திருமண ஏற்பாடு தடைபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் வருத்தத்துடன் ஆடியோ வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆடிேயா வெளியிட்டார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதிடீரென கோவைக்கு செல்லுமாறு கூறிய அதிகாரிகளால் தன் மகளின் திருமண ஏற்பாடு தடைபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் வருத்தத்துடன் ஆடியோ வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.த்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில், ``என்னுடைய மகள் திருமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்தது. இதற்காக உறவினர்கள் வந்து செல்ல வேனையும் ஏற்பாடு செய்துவிட்டேன். சனிக்கிழமை மாலை முதல் உறவினர்கள் வரத்தொடங்கினார்கள்.

தடைபட்டது

இந்தநிலையில் திடீரென சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கோவைக்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என போலீஸ் நிலையத்திலிருந்து கூறினார்கள். நான் அதிகாரிகளிடம், மறுநாள் நடைபெறுவதாக இருந்த எனது மகள் திருமண ஏற்பாடு குறித்து கூறி, மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தேதி குறிக்க வேண்டும் எனவும் கூறினேன். ஆனால் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு கூறியதால், எனது வீட்டு சுப காரியம் தடைபட்டு போனது. நான் இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி கோவை பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டேன். இதனால் மன உளைச்சலில் உள்ளேன், என அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்