அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் வாழைத்தார்கள் ரூ.14½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் வாழைத்தார்கள் ரூ.14½ லட்சத்துக்கு விற்பனையானது.

Update: 2023-02-26 20:40 GMT

அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் வாழைத்தார்கள் ரூ.14½ லட்சத்துக்கு விற்பனையானது.

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், கோவிலூர், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 979 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.45-க்கும், நேந்திரன் ரூ.17-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.720-க்கும், ரஸ்தாளி ரூ.550-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், மொந்தன் ரூ.250-க்கும், ரொபஸ்டா ரூ.570-க்கும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரத்து 750 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.

கோபி

இதேபோல் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 4 ஆயிரத்து 490 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.48-க்கும், நேந்திரன் ரூ.21-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.390-க்கும், தேன்வாழை ரூ.480-க்கும், செவ்வாழை ரூ.690-க்கும், பச்சைநாடன் ரூ.410-க்கும், ரொபஸ்டா ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.490-க்கும் விற்பனையானது.

மேலும் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 5 ஆயிரத்து 850 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 8 ரூபாய் முதல் 14 ரூபாய் 10 காசு வரை என மொத்தம் 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஏலத்தில் வாழைத்தார்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 40 ஆயிரத்து 750-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்