கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம- பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

Update: 2022-10-22 20:43 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

நாட்டு சர்க்கரை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 747 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை முதல் தர நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 660 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 430 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 450 ரூபாய்க்கும் ஏலம் போனது.

பழனி கோவில் நிர்வாகம்

மொத்தம் 1,095 மூட்டைகள் 65 ஆயிரத்து 700 கிலோ எடையுள்ள நாட்டு் சர்க்கரை 27 லட்சத்து 9 ஆயிரத்து 190 ரூபாய்க்கு பழனி பாலதண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் சார்பாக கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்