சுவர் இடிந்து விழுந்து 3 ஆடுகள் சாவு-பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதிஉதவி
சுவர் இடிந்து விழுந்து 3 ஆடுகள் இறந்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதிஉதவி வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் ஊராட்சி குஞ்சயாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் விளாத்திகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இவரது வீட்டின் பின்புறம் கட்டிப்போடப்பட்டு இருந்த ஆடுகள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 ஆடுகள் பரிதாபமாக செத்தன. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேற்று சண்முகவேலுக்கு நிதி உதவி வழங்கினார். மேலும் இடிந்து விழுந்த சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்