மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா

Update: 2023-01-12 17:11 GMT


ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 4-ந்தேதி இரவு பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுவிழா நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து 6-ந்தேதி அம்மன் திருவீதி உலாவருதல் நிகழ்ச்சியும் 9-ந்தேதி இரவு இளநீர் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை சொட்டக் கவுண்டம்பாளையத்திலிருந்து முப்பாட்டு விளக்கு வருதல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுபூஜையுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அதேபோல் குண்டுமல்ல நாயக்கனூர்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது.

மேலும் செய்திகள்