ரெங்கநாதரின் திருவாபரணங்களுடன் மாரியம்மன் வீதியுலா
ரெங்கநாதரின் திருவாபரணங்களுடன் மாரியம்மன் வீதியுலா நடந்தது.
லால்குடி:
லால்குடி அருகே உள்ள அன்பில் மகாமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு மகாமாரியம்மன் கோவிலுக்கு வரப்பட்ட ரெங்கநாதரின் திருவாபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, திருவீதி உலா நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.