ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடல்சார் வாரிய நிர்வாக அதிகாரிக்கு சிறை - ஐகோர்ட்டு தீர்ப்பு

ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடல்சார் வாரிய நிர்வாக அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-03-11 20:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

கடலூர் துறைமுகத்தில் மீன்பிடிக்கும் படகுகளை இயக்க தமிழ்நாடு கடல்சார் வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயபாரதி நிறுவனத்தின் படகுகளை பதிவு செய்வதற்கு நிர்வாக அதிகாரியாக இருந்த முகமது அலி ரூ.500 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி முகமது அலியை கடந்த 2013-ம் ஆண்டு விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புகார் கொடுத்தவர் கீழ்கோர்ட்டில் பிறழ்சாட்சியாக மாறினாலும், குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று கூற முடியாது. முகமது அலி லஞ்சம் வாங்கியதை போலீசார் நிரூபித்துள்ளனர். எனவே, முகமது அலியை குற்றவாளியாக முடிவு செய்கிறேன். தற்போது அவருக்கு 72 வயது என்பதால், ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்