மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.

Update: 2023-05-29 17:20 GMT

லாலாபேட்டை அருகே கள்ளப்பள்ளி (தெற்கு) பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் கரகம்பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும், தொட்டில் குழந்தை ஏந்தி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு குட்டிகுடி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கிடா வெட்டு பூஜையும், நாளை மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்