பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலின் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்தநிலையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.