ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி ஊர்வலம்

வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-16 17:54 GMT

வந்தவாசி

வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட செயலர் ஜெ.அக்பர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செய்யாறு அப்பாஸ் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலர் முஜிபூர்ரஹ்மான், நகர தலைவர் யூசுப், நகர செயலர் கலிமுல்லா, நகர துணை செயலர் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வந்தவாசி கோட்டை மூலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ் நிலையம், பஜார்வீதி வழியாக தாலுகா அலுவலகம் சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

பின்னர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி துணை தாசில்தார் சதீசிடம் அவர்கள் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்