தென்காசியில் மாரத்தான் போட்டி

தென்காசியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2023-09-24 18:45 GMT

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி நகர தி.மு.க. சார்பில் தென்காசியில் ஓடும் சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தி பொதுமக்களுக்கான மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் இருந்து காலை 7 மணிக்கு இந்த ஓட்டம் தொடங்கியது. இதனை தி.மு.க. நகர செயலாளரும். தென்காசி நகர் மன்ற தலைவருமான சாதிர் தொடங்கி வைத்தார். ஆயிரப்பேரி கிராமத்தின் குளக்கரை வரை சென்று திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்தை சுமார் (6 கி.மீ.) இந்த மாரத்தான் ஓட்டம் அடைந்தது. இதில் மொத்தம் 1,250 பேர் கலந்து கொண்டனர்.

பெரியவர்களுக்கான போட்டியில் கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியை சேர்ந்த பசுபதி முதலிடத்தையும், நெல்லையை சேர்ந்த ஆனந்த் 2-ம் இடத்தையும், தென்காசியை சேர்ந்த கண்ணன் 3-ம் இடத்தையும், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த அசோக்குமார் 4-ம் இடத்தையும் பெற்றனர். 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் தென்காசியை சேர்ந்த ஹரி கவுசிக் முதலிடத்தையும், இராஸ் அகமது 2-வது இடத்தையும், முகமது அல் 3-ம் இடத்தையும் வெங்கடேஷ் 4-ம் இடத்தையும் பெற்றனர்.

முதல் பரிசாக 1 கிராம் தங்க காயின், 2-ம் பரிசாக ரூ.2,000, 3-ம் பரிசாக ரூ.1,000, 4-ம் பரிசாக ரூ.700 வழங்கப்பட்டது. மேலும் இரு பிரிவுகளிலும் ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், டீ சர்ட் மற்றும் ஒரு பேனா ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்