சேலம்
சேலம் ரெயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டு 50-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதன்படி சேலம் பால் மார்க்கெட் அருகே தொடங்கிய இதற்கு சங்க தலைவர் வெங்கடபதி தலைமை தாங்கினார். செவ்வாய்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி பள்ளப்பட்டி வழியாக சென்று மீண்டும் பால் மார்க்கெட் பகுதியில் முடிவடைந்தது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.