காரைக்குடியில்மாரத்தான் போட்டி

காரைக்குடியில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-11-08 18:45 GMT

காரைக்குடி, 

உலக இருதய தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் கே.எம்.சி. மருத்துவமனை சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 16 முதல் 25 வயது வரை, 26 முதல் 49 வயது வரை, 50 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாகவும், பெண்களுக்கான பிரிவில் 16 வயதிற்கு மேற்பட்டோருக்கும் என போட்டிகள் நடந்தது. கனரா வங்கி துணை பொது மேலாளர் பாபு, ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார், ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரகுமான், அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கினர். இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 26 முதல் 49 வயதினருக்கான பிரிவில் கலந்து கொண்டு 5.5 கி.மீ. தூரம் ஓடினார். வெற்றி பெற்றவர்களுக்கு கே.எம்.சி. மருத்துவமனை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவிற்கு கே.எம்.சி. மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் காமாட்சி சந்திரன் தலைமை தாங்கினார். 16 முதல் 25 வயதிற்கான ஆண்கள் பிரிவில் வேல்முருகன் முதலிடத்தையும், 26 முதல் 49 வயதினருக்கான பிரிவில் ரஞ்சித் முதலிடத்தையும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் நஞ்சுவாணன் முதலிடத்தையும், பெண்களுக்கான பிரிவில் காஷ்மிகா முதலிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை 9-வது பிரிவின் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ரஜினி பிரதாப், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆத்மநாதன்(திருப்பத்தூர்), கணேஷ் குமார்(தேவகோட்டை), தொழில் வணிக கழக செயலாளர் கண்ணப்பன், அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்