மோட்டார் சைக்கிளில் சென்று மான்ராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று மான்ராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-30 19:11 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று மான்ராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததாகவும், குடிநீர் சரிவர வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மான்ராஜ் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் திருவண்ணாமலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தெருக்களில் இருந்த குப்பைகளை அகற்ற வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று குப்பைகளை அகற்றினா்.

குடிநீர் கிடைக்க ஏற்பாடு

மேலும் குடிநீர் சரிவர வரவில்லை என பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஊராட்சி பகுதியில் குடிநீர் சரிவர கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்ததால் அதையும் சீரமைக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.வின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஒன்றிய கவுன்சிலர் ஜெயமணி முருகன், வர்த்தக அணி செயலாளர் முருகன், மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்