மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-28 18:27 GMT

மன்னார்குடி

கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பாப்பையன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், ஏ.ஐ.டி.யூ.சி.நகர தலைவர் தனிகோடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் குறைந்த சம்பளத்தில் நீண்ட நாட்களாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி சட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ஊதியத்தை உறுதி செய்து உயர்த்தி வழங்க வேண்டும்.

கொரோனா ஊக்க தொகை

கொேரானா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும். 20 ஆண்டுகளாக பணிபுரியும் ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்