மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடக்கும்உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வீடு, வீடாக அழைப்பு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக வீடு, வீடாக அழைப்பு விடுக்கப்பட்டது.

Update: 2023-08-10 18:45 GMT

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த மாதம் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பழனிசெட்டிபட்டியில் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூராட்சி பொதுமக்கள் சார்பில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். அதன்படி நாளை (சனிக்கிழமை) பழனிசெட்டிபட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதற்கான பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் பழனிசெட்டிபட்டியில் வீடு, வீடாக சென்று உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது போராட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களை அவர்கள் வினியோகம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்