மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து

பிளஸ்-2 தேர்வில் மாநில சாதனை படைத்தவர்களுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2023-05-08 18:58 GMT


விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளதாவது:- பிளஸ்-2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவது சிறப்பு மிக்கதாகும். இதற்காக உழைத்த ஆசிரிய பெருமக்களுக்கும், பெருமை தேடித்தந்த மாணவ-மாணவிகளுக்கும் எனது பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்