தூத்துக்குடியில் குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம்; கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-01-21 18:45 GMT

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

மணிமண்டபம்

தூத்துக்குடியில் நேற்று குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்காவில் நடந்த இந்த விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் கூறுகையில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத்தந்தை என போற்றப்படும் குரூஸ் பர்னாந்துக்கு ரூ.77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. இந்த மணிமண்டபம் எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376.60 சதுர அடி பரப்பில் முழு உருவச் சிலையுடன் அமைக்கப்படுகிறது. மேலும் மண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவரும் அமைக்கப்படுகிறது" என்றார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன், பரதர் நலச்சங்க தலைவர் ரொனால்ட், சமூக ஆர்வலர் பாத்திமா பாபு, மாவட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகு நலச் சங்க தலைவர் கயாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்