மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-06-23 17:48 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே செங்கல்தோப்பு மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி புன்னியாதானம் மற்றும் அம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலம், கரகம் ஆகியவை நடந்தது. அப்போது துர்க்கை மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எடுத்து வரப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்