மாங்காய் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

சாணார்பட்டி பகுதியில் கோடை மழை பெய்ததால் மாங்காய் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-05-02 19:00 GMT

சாணார்பட்டி பகுதியில் செங்குறிச்சி, கணவாய்பட்டி, வேம்பார்பட்டி, ஜோத்தாம்பட்டி, மணியகாரன்பட்டி அஞ்சுகுளிபட்டி, கோணப்பட்டி, அய்யாபட்டி, தவசிமடை, வி.எஸ்.கோட்டை, ஆவிளிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா தோப்புகள் உள்ளன. இங்கு விளையும் செந்தூரம், கல்லாமை, காசா, பங்கனபள்ளி, மல்கோவா, காளாப்பாடி, இமாம்பசந்து, சப்பட்டை உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கும், டெல்லி, மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே சீசனையொட்டி மரங்களில் மாங்காய் காய்த்து தொங்குகிறது. கடந்த சில தினங்களாக சாணார்பட்டி பகுதியில் கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மா விவசாயிகளிடம் கேட்டபோது, இந்த ஆண்டு மா சீசன் தொடக்கத்தில் டிசம்பர், ஜனவரி மாதத்தில் பூ பூக்கும் தருவாயில் மழை பெய்து பூக்கள் கொட்டியது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கடும் வெயிலான பிஞ்சுகள் உதிர்ந்தன. தொடர்ந்து இயற்கை கை கொடுக்காத நிலையில் தற்போது பெய்யும் கோடை மழையால் மாமரங்களில் மீதமுள்ள 50 சதவீத மாங்காய்களுக்கு நன்மையை அளிக்கும். மாங்காய்களில் நோய் தாக்குதல் குறைந்து, எடை கூடும். எனவே அதிக சூறை காற்று இல்லாமல் மிதமான கோடை மழை பெய்தால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு ஏற்படாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்