மட்டுவார்குழலி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம்
ஓரியூரில் மட்டுவார்குழலி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூரில் மட்டுவார்குழலி அம்மன் சமேத சேயுமானார் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கடந்த மே மாதம் 4-ந் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று 48-வது நாளையொட்டி மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு சென்னை சிவனடியார் ஒளியரசு தலைமையில் தீந்தமிழ் திருமுறை வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புனிதநீர் கலசத்தை சிவனடியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.