பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்.பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும்.மேலும் வாகனத்தில் எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் வைக்கப்படவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.