அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
தேன்கனிக்கோட்டையில் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 55-வது ஆண்டு மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சுதர்சன ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழையபேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அய்யப்ப சாமி ஊர்வலம் நடந்தது.