வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
வாலாஜா மேல்புதுப்பேட்டை வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் 48 நாள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக சாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கலச தீர்த்த பூஜை மற்றும் அபிஷேகத்தின் போது, ஸ்ரீ ஜலகுரு பழனி சுவாமிகள் பகவானுக்கு தத்வார்ச்சனை செய்து, தீபாதாரனை நடத்தி, பக்தர்கள் பரமபத சொர்க்கவாசல் வழியாக வருடம் முழுவதும் வணங்கி வழிபட அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி தலைவர் ஸ்ரீ வாசுதேவன் சுவாமிகள் செய்திருந்தார்.