பைரவர் கோவிலில் மண்டல பூஜை தொடக்கம்

தகட்டூர் பைரவர் கோவிலில் மண்டல பூஜை தொடங்கப்பட்டது.

Update: 2023-09-18 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை முதல் நாள் மண்டல பூஜை தொடங்கியது. முன்னதாக பைரவருக்கு ஆராதனை செய்யப்பட்டது. உபயதாரர் வாய்மேடு மேற்கு தாயுமானதேவர் குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் தேர்த்திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் எல்.எஸ்.இ, பழனியப்பன், ஆர்.டி.குணா, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் அமிர்தகடேஸ்வரன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்