அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 10 பேர் மீது வழக்கு
காரைக்குடி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி சங்கத்திடல் மஞ்சுவிரட்டு பொட்டலில் உரிய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் காரைக்குடி தெற்கு போலீசில புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா, விலங்கு வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அப்பகுதியை சேர்ந்த ரவிக்குமார், சரவணன், ஆறுமுகம், ரெத்தினம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.