மாஞ்சோலை அரசு பள்ளியில் தூய்மை பணி

மாஞ்சோலை அரசு பள்ளியில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Update: 2023-02-11 20:46 GMT

அம்பை:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக காப்பு காட்டு பகுதியான மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள தேயிலைத் தோட்ட பகுதியான மாஞ்சோலையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் தூய்மை பணிகள் நடைபெற்றது. மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 9 மற்றும் 12 அணியைச் சார்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பள்ளி வளாகத்தில் உள்ள மண்டிக் கிடந்த புதர்களையும், விளையாட்டு மைதானத்தில் இருந்த புல் செடிகளை அகற்றியும் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். சிறப்பு காவல் படை கமான்டண்ட் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் உதவி கண்காணிப்பாளர்கள் மனோகரன், பழனிகுமார் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், பள்ளி துணை தலைமை ஆசிரியர் அருண் ஆகியோர் தலைமையில் இந்த பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்