மணப்பாடுதிருச்சிலுவைநாதர்ஆலயத்தின் மகிமை பெரும் திருவிழா

மணப்பாடுதிருச்சிலுவைநாதர்ஆலயத்தின் மகிமை பெரும் திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Update: 2022-09-14 10:47 GMT

உடன்குடி:

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 443-வது மகிமை பெரும் விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

திருச்சிலுவைநாதர் ஆலயம்

திருச்செந்தூர் அருகிலுள்ள மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலம் தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆலயத்தின் 443-வது மகிமை பெரும்திருவிழா, கடந்த 4-ந்் தேதி மறையுரை திருப்பலியுடன் காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் செல்வம் தலைமையில் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.

மலையாள திருப்பலி

திருவிழா நாட்களான கடந்த செப்.5-ந்தேதி முதல் செப்.12-ந்தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலையில் பங்கு தந்தையர்கள் மறையுரையும், கலைநிகழ்சிகளும் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு மணவை மக்கள் சார்பில் திருப்பலியும், மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆயருக்கு பங்கு மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.

மெய்யான திருச்சிலுவை ஆசீர்

நேற்று திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயம் மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், காலை 5 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்தில்ஆயர் நசரேன் சூசை பெரும் விழா திருப்பலி, ஜந்து திருக்காய சபையின் பொறுப்பாளர் நியமனம், மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. சுற்றுப்புற பகுதிகள் உள்ள ஏராளமான திருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பாதிரியார்கள் பங்கு மக்கள் உட்பட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியும்நடந்தது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி தென்காசி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ், அருட் சகோதரர் ரஷ்யன், அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்