மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழா:மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழா:வை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2023-02-08 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

மணக்கரை மலைப்பார்வதி அம்மன்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

மாட்டுவண்டி பந்தயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடந்தது. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி என நான்கு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. மணக்கரையில் இருந்து வல்லநாடு வரை பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

மாட்டுவண்டி பந்தயத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 8 பெரிய மாட்டு வண்டிகளும், 17 சிறிய மாட்டு வண்டிகளும், 35 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளும், 9 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.

பரிசு பெற்ற வண்டிகள்

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வேலங்குளம் கண்ணன் வண்டியும், இரண்டாம் பரிசை தூத்துக்குடி அஜித்குமார் வண்டியும், மூன்றாம் பரிசு ராஜபதி வண்டியும் பெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வேளங்குளம் கண்ணன் வண்டியும், இரண்டாம் பரிசை செக்காரக்குடி வண்டியும், மூன்றாம் பரிசு பேட்டை வண்டியும் பெற்றது.பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதலாம் பரிசை மணக்கரை சீனிபாண்டியன் வண்டியும், இரண்டாம் பரிசை செக்காரக்குடி வண்டியும், மூன்றாம் பரிசை கீழப்பாட்டம் வண்டியும் பெற்றன.

மேலும் குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்