அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

நீலகிரியில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-30 18:45 GMT

ஊட்டி,

2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். அதேபோல் மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 20 நபர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

ஊட்டி அருகே தாவணெ அரசு பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஷீலா தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் நந்தினி, ஆரத்தி, நாகமணி, விஜயா உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்தி திறம்பட செயல்படுத்தவும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, தலைமை ஆசிரியர் பிரகாஷ், ஆசிரியர் உறுப்பினர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்