சின்னசேலம் அருகேஅரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
சின்னசேலம் அருகே அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
சின்னசேலம்,
சின்னசேலம் தாலூகா எலவடி உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். ஆசிரியர் கழகத் தலைவர் லட்சாதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் திலகவதி வரவேற்றார். கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பார்வையாளராக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வழிகாட்டுதல், மாணவர்களை ஊக்கப்படுத்தி உயர்கல்வி பயில்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அளித்தனர். மேலும் தமிழ்நாடு நாள் விழாவில், பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் 3- வது இடம் பெற்ற இப்பள்ளியின் மாணவி பிருந்தா பூஜாவை பாராட்டி, முதல்-அமைச்சரின் அழைப்பிதழ் கடிதம் வந்ததற்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாணவி பிருந்தா பூஜாவுக்கு ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், 10 மற்றும் 12 -ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.