காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 680 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த பல்லிக்கோட்டை மேலூரை சேர்ந்த ஜெயராமன் (வயது 33) என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.