ஆட்டோவில் மண்எண்ணெய் கடத்தியவர் கைது
ஆட்டோவில் மண்எண்ணெய் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
திசையன்விளை:
மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் மற்றும் கடலோர காவல்படையினர் நேற்று உவரியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் 400 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டிவந்த திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வன்னிராஜ் (வயது 40) என்பவரை கைது செய்தனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்து உவரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அரசு மானிய விலையில் வழங்கும் மண்எண்ணையை கூடுதல் விலைக்கு வாங்கி திருச்செந்தூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.