மதுரையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
மதுரை உசிலம்பட்டி அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மதுரை,
மதுரை உசிலம்பட்டி அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சீல்நாயக்கன் பட்டியை சேர்ந்த வேடன் என்பவர் நள்ளிரவில் படம் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாலை 3 மணிக்கு விடுவிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வீட்டில் வந்து தூங்கிய வேடன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதால் வேடன் உயிரிழந்து இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், உறவினர்கள் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.