மொபட்டில் 150 கிேலாரேஷன் அரிசி கடத்தியவர் கைது

மொபட்டில் 150 கிேலாரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-15 18:12 GMT

குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கடையக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மொபட்டில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் சிவகங்கை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த மெய்யப்பன் (வயது 57) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்