கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவருக்கு கத்திக்குத்து

பண்ருட்டியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

Update: 2023-06-13 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார். இதேபோன்று பண்ருட்டி கொக்குப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுமன், குணா. இவர்கள் 3 பேரும் ஒரு கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தகுமாரிடம் குணா, சுமன் ஆகியோர் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வசந்தகுமார் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன், குணா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்