காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
சோளிங்கரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோளிங்கர் கிழக்கு பஜார் தெரு பகுதியில் ஒரு கும்பல் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சோளிங்கர் குமரன் தெருவை சேர்ந்த விஜயன் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைதனர். அவரிடமிருந்து 150 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.