காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
ஆம்பூரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆம்பூர் போலீசார் எஸ்.கே.ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 47) என்பவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.