அரசு பஸ் மோதி தொழிலாளி படுகாயம்

அரசு பஸ் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-22 19:00 GMT

வேதாரண்யம் அருகே உள்ள அவரிக்காடு பகுதியை சோ்ந்தவர் சுகுமாறன் (வயது38). தச்சு தொழிலாளி. இவர் தற்போது மறைஞாயநல்லூர் கிராமத்தில் தங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுகுமாறன் தனது மோட்டார் சைக்கிளில் முதலியார்தோப்பிலிருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மண்டபகுளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்