ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு நடுத்தெருவை சேர்ந்தவர் அகமதுஉசேன்(வயது 48). இவர் நேற்று முன்தினம் அசூர் கிராமத்தில் அரசு நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் உணவு எடுத்துச்சென்றுள்ளார். இதில் உணவு பின்புறம் இருப்பதால் இடமில்லாத காரணத்தினால் ஆட்டோவின் ஓட்டுநர் அருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருக்கன்குடி எழுமூர் சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அகமதுஉசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.