தோட்டத்தில் மோட்டார் திருட முயன்றவர் கைது

தோட்டத்தில் மோட்டார் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-23 18:45 GMT

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சோலபாளையத்தை சேர்ந்தவர் வஞ்சிமுத்து(வயது 56). இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் அறை பகுதியில் சத்தம் கேட்டு உள்ளது. இதையடுத்து தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்த போது, மர்மநபர் ஒருவர் மோட்டாரை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த ராஜாராம்(வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்