காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-15 15:40 GMT

மயிலாடுதுறை

காதலியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை கிராமத்தை சேர்ந்த சேவியர் மகன் ஜோசுவா(வயது 28). டிரைவர். திருவாரூர் மாவட்டம் பெரிய துளார் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகள் சவுதியா(27). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது ஜோசுவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சவுதியாவிடம் பலமுறை உல்லாசத்தில் இருந்துள்ளார்.

திருமணம் செய்ய மறுப்பு-கொலை மிரட்டல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுதியா தனது காதலன் ஜோசுவா வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு ள்ளார். அப்போது ஜோசுவா தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு, தனக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சவுதியா புகார் செய்தார்.

கைது-சிறையில் அடைப்பு

இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோசுவாவை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஜோசுவாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







Tags:    

மேலும் செய்திகள்