ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருடியவர் கைது

காரைக்குடி ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-01 19:23 GMT

காரைக்குடி,

தேவகோட்டை ராமலிங்க நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 23). இவரது கணவர் சுரேஷ். இந்த நிலையில் சுரேசுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்காக காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு துணையாக செல்வி உடன் இருந்தார். மருத்துவ செலவுகளுக்காக செல்வி தனது பர்சில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தார். கணவரை கவனிக்கும் பணிகளில் செல்வி ஈடுபட்டிருந்தபோது அவரது பர்சில் இருந்து ரூ.50 ஆயிரத்தை, காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு செய்த போது ஒரு பெண் பர்சில் இருந்து ரூ.50 ,ஆயிரத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இது குறித்த செல்வியின் புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து விசாரணை நடத்தி தேவகோட்டையை சேர்ந்த ரேஷ்மா (34) என்பவரை கைது செய்து பணத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்