பெண்ணிடம் நகை திருடியவர் கைது

பெண்ணிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-28 17:20 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை ரமலான்நகரை சேர்ந்தவர் உமர்சலீம். இவரது மனைவி உம்முல்பாத்திமா (வயது 50). இவர் வீட்டின் முன்பகுதியில் தனது அரைபவுன் மோதிரம், ஒருபவுன் தோடு ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவி கொண்டிருந்தார். அப்போது அதனை நோட்டமிட்ட மர்ம நபர் அங்கு வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார்.. அவரை கண்டு பரிதாபப்பட்ட உம்முல்பாத்திமா வீட்டிற்குள் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மர்ம நபர் மோதிரம், தோடு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். தண்ணீரோடு வந்த அவர், தோடு, மோதிரம் ஆகியவற்றை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவரும், குடும்பத்தினரும் விரைந்து சென்று அந்த பகுதியில் தேடினர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்த மர்ம நபரை மடக்கி பிடித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுரை இளமனூர் சக்கிமங்கலம் எல்.கே.பி. நகரை சேர்ந்த லட்சுமணன் (42) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்