வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது

வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-10 18:48 GMT

நகை, பணம் திருட்டு

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51), பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளிேய சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், அலமாரியில் வைத்திருந்த ரூ.10 லட்சம் மற்றும் ¾ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

ஒருவர் கைது

இந்த சம்பவம் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பதிவாகியுள்ள கைரேகைகள் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை ேசர்ந்த பரமசிவம் (46) உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்