பெண்ணிடம் நகை, செல்போன் திருடியவர் கைது
வாணியம்பாடியில் பெண்ணிடம் நகை, செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). சி.எல்.சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வருவதற்குள் வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த செல்போன் மற்றும் கம்மல் திருட்டு போயிருந்தது.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சங்கர் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்மலை மீட்டனர்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.