கன்றுக்குட்டியுடன் மாட்டை திருடிய வாலிபர் கைது

கோவில்பட்டியில் கன்றுக்குட்டியுடன் மாடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-26 16:20 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கித்துரை (வயது 23). இவர் பசுவந்தனை ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 24-ந் தேதி கோவில்பட்டி பாரதியார் நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு மாடு மற்றும் கன்றுக்குட்டி காணாமல் போனது.

இதுகுறித்து இசக்கித்துரை நேற்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி துறையூர் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் மாரிமுத்து (21) என்பவர் இசக்கித்துரையின் மாடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பாமா, மாரிமுத்துவை கைது செய்தார். அவரிடமிருந்த மாடு மற்றும் கன்றுக்குட்டியை மீட்டு மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்