சோலார் நிறுவனத்தில் காப்பர் கம்பி திருடியவர் கைது
தலையால்நடந்தான்குளத்தில் சோலார் நிறுவனத்தில் காப்பர் கம்பி திருடியவர் கைதுசெய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் சோலார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சத்து 37ஆயிரம் காப்பர் கம்பிகளை மர்மநபர் வெட்டி திருடி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையி, 3 பேர் அந்த காப்பர் கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதில் தலையால் நடந்தான் குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (வயது 50) சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், கூட்டாளிகளான சுடலை, குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.