பெண்ணை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய நபர் கைது

Update: 2023-08-12 08:32 GMT

திருவள்ளூர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 43) பூ வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உறவுக்காரரான சுப்பிரமணியம் என்பவருடன் திருத்தணி செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஜோசப் ராஜ் (44) என்பவர் ஏற்கனவே அமுதாவை தெரியும் என்பதால் குடிபோதையில் அமுதாவிடம் வந்து பணம் கேட்டுள்ளார். அமுதா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த ஜோசப் ராஜ் அமுதாவை தான் கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் அமுதாவின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

அப்பொழுது உடனிருந்த சுப்பிரமணியம் தடுக்க முயன்றார். அவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு ஜோசப் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அமுதாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப் ராஜை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்