மூதாட்டிகளிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

மூதாட்டிகளிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-12 18:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு அருகே உள்ள திருமாந்துறையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் 1¼ பவுன் தங்க சங்கிலியையும், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் 6¼ பவுன் தங்க சங்கிலியையும் மர்மநபர் ஒருவர் கடந்த ஆண்டு பறித்துச்சென்றார். இதுகுறித்த புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டிகளிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் அரசம்பட்டி மேலத் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்